மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயில் அரியவகை மரங்கள் எரிந்து சாம்பலாகின.
தென்காசி அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் வெயில் தாக்கத்தால் குற்றால அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகள் வறண்டு காணப்படுகின்றன. மலைப் பகுதிகளில் கடும் காற்று வீசுவதால் மரங்களில் உள்ள இலைகள் உதிர்ந்துள்ளன. இந்தநிலையில் குற்றாலம் செண்பகதேவி அருவி பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் காட்டுத் தீ பரவி உள்ளது. இதனால், அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் தீயில் எரிந்து சாம்பலாயின. வனத்துறையினர் 3 குழுக்களாக பிரிந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Discussion about this post