தமிழகத்தில் 13க்கும் மேற்பட்ட இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக பதிவானதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக வேலூர், திருத்தணி, கரூர் உள்ளிட்ட இடங்களில் வெப்பநிலை 108 டிகிரி செல்சியஸாக வெப்பம் பதிவானது. ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்தது. இன்றும் இதே வானிலை தொடரும் என்றும் ஓரிரு இடங்களில் அனல் காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோயம்புத்தூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களின் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் வங்கக் கடலில் சில பகுதிகள், வடக்கு அந்தமான் கடல், அந்தமான் தீவுகளில் அடுத்த 3 நாள்களுக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post