உதகையில் கோடை சீசன் களை கட்டியுள்ள நிலையில், கர்நாடகா அரசு தோட்டக்கலைத்துறை பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
உதகை படகு இல்லம் அருகே மைசூர் மகாராஜா கர்நாடக அரசுக்கு வழங்கிய 35 ஏக்கர் நிலத்தில் அம்மாநில அரசு அழகிய பூங்கா அமைத்து, பராமரித்து வருகிறது. இந்த பூங்காவில் ஆர்கிட் மலர்கள் கொண்ட மினி கண்ணாடி மாளிகை, இத்தாலியன் பூங்கா, புல்வெளி மற்றும் பல்வேறு வகையான மலர்ச்செடிகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பறவைகள் ஆகியவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தற்போது சீசன் களைகட்டியுள்ளதால், தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உதகை தாவரவியல் பூங்காவுக்கு அடுத்தபடியாக, பெரியபூங்காவாக இருக்கும் இப்பூங்காவில் நுழைவுக் கட்டணமாக 20 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.
Discussion about this post