இந்திய அணியின் அதிரடி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார்.
பஞ்சாபைச் சேர்ந்த இடது கை பேட்ஸ்மேனான யுவராஜ் சிங், கடந்த 2011ம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்தியா கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றினார். ஒருநாள், டி 20 ஆட்டங்களில் அபாரமாக ஆடிய நிலையில், புற்றுநோய் பாதிப்பால், அவர் கிரிக்கெட் ஆட்டத்தில் இருந்து விலகினார். 40 டெஸ்ட் மற்றும் 304 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் யுவராஜ் சிங் விளையாடியுள்ளார். இந்தநிலையில், ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் இடம் பெற்று விளையாடிய யுவராஜ் சிங், சர்வதேச, முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்துள்ளார். ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாடு டி20 லீக் போட்டிகளில் பங்கேற்று ஆட பிசிசிஐ தடையில்லா சான்று கோரவும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post