கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ வீட்டின் முன்பு பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
யாளிக்காவல் பகுதியில் அமைந்துள்ள, சட்டப்பேரவை உறுப்பினர் முனி ரத்னாவின் வீட்டின் முன் இந்த சம்பவம் நிகழ்ந்தது. பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்ததில் அருகில் இருந்த வீடுகள் அதிர்ந்தன. இந்த சம்பவத்தில் வெங்கடேஷ் என்ற சலவைத் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
பெங்களூர் மாநகர காவல் ஆணையர் சுனில் குமார் சம்பவம் நடந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். சம்பவத்தின் பின்னணி குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ வீட்டின் முன் நடைபெற்ற இந்த சம்பவம் பெங்களூர் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post