ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் தக்காளி அதிக விலைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
போதிய மழை இல்லாத காரணத்தினாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதாலும் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரத்து குறையும்நிலையில், வரும் காலங்களில் தக்காளி விலை மேலும் உயரும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
Discussion about this post