தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அனல் காற்று வீசும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post