நீலகிரி மாவட்டம் உதகையில் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள 123வது மலர் கண்காட்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார்.
சர்வதேச அளவில் புகழ் பெற்ற இந்த கண்காட்சி, தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும். இந்த மலர் கண்காட்சியில், ஒன்றறை லட்சம் மலர்களை கொண்டு, நாடாளுமன்ற வடிவிலான மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக அமைந்துள்ளது. மேலும், இன்கா மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு, பிளாக்ஸ் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த மலர்கள் அடங்கிய 35 ஆயிரம் பூந்தொட்டிகள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இந்த மலர் கண்காட்சியை காண ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு ஏற்பாடு பலப்பட்டுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post