நீலகிரியில் பெய்த கனமழை காரணமாக, குன்னூர் இரயில் நிலையம் அருகே, பழமை வாய்ந்த ராட்சத மரம் முறிந்து விழுந்தது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்ததுடன் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், பலத்த மழை மற்றும் காற்றின் வேகம் காரணமாக, குன்னூர் இரயில் நிலையம் அருகே இருந்த பழமை வாய்ந்த ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா பயணிகளின் மூன்று வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தது. தகவலறிந்து வந்த ரயில்வே மற்றும் சுகாதார துறையினர், துரிதமாக செயல்பட்டு சாலையில் விழுந்த மரத்தை அகற்றினர்.
Discussion about this post