பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் குறிப்பிட்ட பட்டப்படிப்புகள் அரசு பணிகளுக்கு உகந்தவை அல்ல என அரசாணை வெளியிட்டுள்ளது.
உயர்க்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் சிதம்பரம் அண்ணா பல்கலைகழகம் சார்பாக வழங்கப்படும் 7 வகையான எம்.பி.ஏ படிப்புகளும் பல்வேறு இரட்டை பட்டப்படிப்புகளும் அரசுப் பணிகளுக்கு உகந்தது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அண்ணாமலை பல்கலைகழகம் சார்பாக வழங்கப்படும் இரட்டை பட்டப்படிப்புகளும், பாரதியார் பல்கலைகழகம், திருவள்ளூர் பல்கலைகழகம், பெரியார் பல்கலைகழகம், மதுரை காமராஜர் பல்கலைகழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் வழங்கப்பட்டு வரும் குறிப்பிட்ட சில பட்டப்படிப்புகள் அரசுப் பணிகளுக்கு உகந்தது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்த விவரங்களை மாணவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அனைத்து பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளின் அறிவிப்பு பலகைகளில் தகவல் வெளியிட வேண்டும் எனவும் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post