கள்ளக்குறிச்சியில் துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பும்போது மினிடெம்போ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர். 18 பேர் படுகாயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள கல்வராயன் மலைப்பகுதியில் நடந்த துக்க நிகழ்வில் பங்கேற்ற குன்னூர் மேட்டு வளவு பகுதியை சேர்ந்தவர்கள் 20 பேர் சென்றிருந்தனர். அப்போது மினிடெம்போவில், திரும்பிக்கொண்டிருந்த அவர்கள் மட்டப்பட்டு தரைப்பாலம் வளைவில், ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் சிட்டம்பட்டியை சேர்ந்த ஆண்டி என்பவரும், வேலம்பட்டியை சேர்ந்த சடையச்சி என்பவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். வாகனத்தில் பயணம் செய்த 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post