விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஏ.சி வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் அருகே காவேரிப்பாக்கத்தை சேர்ந்த ராஜி என்பவர், அதேபகுதியில் வெல்டிங் கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு அவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அந்த அறையில் இருந்த ஏ.சி. வெடித்தது. இதில் ராஜி, அவரது மனைவி கமலா மற்றும் மகன் கவுதம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிழந்தனர்.
பக்கத்து அறையில் தூங்கி கொண்டிருந்த அவரது உறவினர்கள், கோவர்தன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Discussion about this post