முசிறி அருகே தொழிலாளர்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் காயமடைந்தனர்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே 100 நாள் வேலைக்கு சென்றுவிட்டு பெண் தொழிலாளர்கள் சரக்கு வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது திருச்சி – நாமக்கல் சாலையின் வளைவில் வாகனம் திரும்பியபோது தலைகீழாக கவிழ்ந்தது.
இதில் சரக்கு வாகனத்தில் பயணித்த தொழிலாளர்கள் 36 பேர் காயமடைந்துள்ளனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் அனைவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Discussion about this post