தென்மேற்கு பருவமழை, ஜூன் 4 ஆம் தேதி முதல் துவங்கும் என்று டெல்லியில் உள்ள தனியார் வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின்போது, இயல்பைவிட சற்று குறைவாகவே மழை பொழிவு இருக்கும் என்று தனியார் வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர். அந்தமான் நிகோபார் தீவுகளில் வரும் 22 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் தனியார் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், கேரளத்தில் ஜூன் 4 ஆம் தேதி முதல் பருவமழை தொடங்கும் என்றும் தென் இந்தியா பகுதிகளைப் பொறுத்தவரை நீண்டகால சராசரியில் 95 சதவிகித மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதாவது 716 மில்லி மீட்டர் மழை பெய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.
Discussion about this post