திமுகவின் போலித்தனம் வெற்றி பெறப்போவதில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து, தேமுதிக பொருளாளர் பிரேமலதா தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக தலைவர் ஸ்டாலின் – தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் சந்திப்பு காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், சந்திரபாபு நாயுடுவை சந்திக்க துரைமுருகனை அனுப்பி வைத்திருப்பது வேடிக்கையான விஷயம் என்றார்.
மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் பதவியேற்கும் நிலையில் நதிநீர் இணைப்பு திட்டம், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
Discussion about this post