காஷ்மீரில் சிறுமி பாலியல் விவகாரத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பந்திபோராவை சேர்ந்த 3 வயது சிறுமியை கடந்த 9ஆம் தேதி அன்று சிலர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பலதரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய தாஹிர் அகமது என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே, சிறுமி பாலியல் விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து, ஸ்ரீநகர் அமர் சிங் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த முயன்றபோது, கல்வீசி தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
Discussion about this post