சேலத்தில் இருந்து சென்னைக்கு பேருந்தில் பயணம் செய்த நகைக் கடை அதிபர், தூக்க கலக்கத்தில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகைகளை தொலைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியை சேர்ந்த வைர நகைக் கடை உரிமையாளர் தாராசந்த் நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம் ஆகிய இடங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நகைகளை விநியோகம் செய்து விட்டு சென்னை வந்துள்ளார். சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகைகளை தன்னுடைய கைப்பையில் வைத்து கொண்டு பயணம் செய்த அவர் வரும் வழியில் அசந்து தூங்கினார். இதைபயன்படுத்தி அவருடைய கைப்பையை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். சென்னை கோயேம்பேட்டில் கண்விழித்து பார்த்த போது பை காணாமல் போயிருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் போது வைர வியாபாரி தூங்கி வழிவதால், புலன் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
Discussion about this post