இந்திய ராணுவத்தின் சீருடையை மாற்றுவதற்கான ஆய்வுகளை பாதுகாப்புத்துறை அமைச்சகம் மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ராணுவ வீரர்கள் அணிந்திருக்கும் சீருடையானது டெரிகாட் ஃபைபர் (terrycot fibre)வகையை சார்ந்த துணியால் செய்யப்பட்டதாகும். இது வெயில் காலங்களில் வீரர்களுக்கு அசவுரியமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அனைத்து சீதோசன நிலைகளிலும் வீரர்கள் அணியும் வகையில் புதிய சீருடையை உருவாக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக உலகில் உள்ள ராணுவங்களின் சீருடைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. அதன்படி தற்போது வீரர்களின் தோள்பட்டையில் இருக்கும் ரேங்க் குறியீடுகள் புதிய சீருடையில் முன்பகுதியில் அமைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்னதாக இந்திய ராணுவத்தின் சீருடைகள் மூன்று முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளன. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பாகிஸ்தான் ராணுவத்திடம் இருந்து வேறுபடுத்தி கட்டுவதற்காக இந்திய ராணுவத்தின் சீருடை முதன்முறையாக மாற்றம் செய்யப்பட்டது. இதனையடுத்து 2-வது முறையாக 1980 ஆம் ஆண்டும், கடைசியாக 2005 ஆம் ஆண்டும் இந்திய ராணுவத்தின் சீருடைகள் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post