தரங்கம்பாடி அருகே கணவரை மனைவியும், அவரது மாமனாரும் கொலைசெய்த சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் தலச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த சதீஸ்குமாரும், அப்பராசபுத்தூரைச் சேர்ந்த கலைமதியும், காதல் திருமணம் செய்துக்கொண்டனர். 5 மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே, கடந்த 14-ம் தேதி, கலைமதி தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். பின், கலைமதி காவல்நிலையத்தில் தனது கணவருடன் வாழவிரும்பவில்லை எனப் புகார் அளித்ததாகத் தெரிகிறது. இதனிடையே டீசல் வாங்க, தனது மனைவியின் ஊரான அப்பராசபுத்தூருக்கு சதீஸ்குமார் சென்றுள்ளார்.
அப்போது சதீஸ்குமாரை கலைமதி கல்லால் அடித்ததாக கூறப்படுகிறது. பின் அங்கு வந்த சதீஸ்குமாரின் மாமனார் நாகராஜ், சதீஸை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இதனையடுத்து சதீஸ்குமாரை மீட்ட பொதுமக்கள், அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சதீஸ்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்தது மனைவி கலைமதி, மாமனார் நாகராஜ் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
Discussion about this post