திருவாரூரில் 7 வயது மாணவி தனது தலைமுடியால் 700 கிலோ எடை கொண்ட காரை 100 மீட்டர் தூரம் வரை இழுத்து சாதனை படைத்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள நெடுங்குளம் பகுதியில் குங்ஃபூ போட்டி நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட 2 ஆம் வகுப்பு படிக்கும் 7 வயது மாணவியான அக்சயா, தலைமுடியால், 700 கிலோ எடை கொண்ட காரை 100 மீட்டர் தூரம் வரை இழுத்து சாதனை படைத்தார். இதனையடுத்து மாணவி அக்சயாவை ஆசிரியர்கள் உள்பட பொதுமக்கள் வாழ்த்தினர்.
பல்வேறு மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு புரூஸ்லீ நினைவு கோப்பை வழங்கப்பட்டது.
Discussion about this post