அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், மகாத்மா காந்தியின் படுகொலையை இந்து தீவிரவாதம் என குறிப்பிட்டார். சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்க கூடிய பகுதியில், வாக்குகளை பெற வேண்டும் என்ற நோக்கில் கமல் இவ்வாறு பேசியிருப்பது பல்வேறு தலைவர்களின் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், நாட்டின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல் கூறியதற்கு கருத்து கூற விரும்பவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையம் வந்த ரஜினியிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
இதேபோல், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், கமலுக்கு பார்வை கோளாறு என்றும், கமலை போன்றவர்கள் தமிழக மக்களால் ஓரங்கட்டபட வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், கமல் காந்தியின் பக்தரா? அல்லது பினராயி விஜயனின் பக்தரா? என கேள்வி எழுப்பினார்.
Discussion about this post