ஜப்பானில் நடைபெற்ற அறிவியல் பறிமாற்ற நிகழ்ச்சியில் பங்கெடுத்து தாயகம் திரும்பிய மாணவனுக்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.
உலக நாடுகளிலிருந்து அறிவியல் துறை சார்ந்த மாணவர்களை அழைத்து, அவர்களது அறிவியல் படைப்புகளை விளக்கும் விதமாக ஜப்பானில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இந்தியாவிலிருந்து அறிவியல் துறை சார்ந்த 70 மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் புதுச்சேரி காரைக்கால் மாவட்டம் நிரவிப் பகுதியில் உள்ள ONGC – பள்ளியில் 12 ஆம் வகுப்பில் படிக்கும் சிபிஷாவும் ஒருவர். சிறுவயது முதலே அறிவியல் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட சிபிஷா ஜப்பானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய அரசின் பிரதிநிதியாக கலந்துகொண்டு தனது அறிவியல் படைப்புகளை விளக்கி பேசினார். விவசாயிகளின் நலனுக்காக தான் கண்டுபிடித்த சென்சார் கருவி குறித்து எடுத்துரைத்தார். இதன் மூலம் விவசாயப் பயிர்களுக்கு என்ன சத்து குறைபாடு உள்ளது என்பதை கண்டறிய முடியும். இந்தநிலையில், காரைக்கால் திரும்பிய மாணவன் சிபிஷாவை மாவட்ட ஆட்சியர் விக்ராந்த் ராஜா சால்வை அணிவித்து பாராட்டினார்.
Discussion about this post