17வது மக்களவைத் தேர்தலின் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் 5 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் 6ஆம் கட்டமாக இன்று 7 மாநிலங்களில் தொடங்கி உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகள், ஹரியானாவில் மொத்தமுள்ள 10 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 8 தொகுதிகள், ஜார்கண்டில் 4 தொகுதிகள் மற்றும் டெல்லியில் 7 தொகுதிகள் என மொத்தம் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. மக்கள் அச்சமின்றி வாக்களிக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
12 மணி நிலவரப்படி மொத்தமாக 25.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மேற்குவங்கத்தில் 38.26 சதவீத வாக்குகளும் டெல்லியில்19.55 சதவீத வாக்குகளும் ஹரியானாவில் 23.26 சதவீத வாக்குகளும் உத்தரபிரதேசத்தில் 21.75 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. பீகாரை பொறுத்தவரை 20.70 சதவீத வாக்குகளும் ஜார்க்கண்டில் 31.27 சதவீத வாக்குகளும் மத்திய பிரதேசத்தில் 28.25 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
Discussion about this post