சூலூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் கோவை இருகூர் சந்தையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
சூலூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கந்தசாமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஓ.எஸ். மணியன் ஆகியோர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். இருகூர் சந்தையிலிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் நோட்டீஸ்களை அளித்து அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அமைச்சர்களுடன் பொதுமக்கள் ஆர்வமுடன் கைக்குலுக்கினர். இதை தொடர்ந்து அங்கிருந்த தேநீர் கடையில் எஸ்.பி, வேலுமணி, ஓ.எஸ். மணியன் ஆகியோர் தேனீர் அருந்தினர். அங்கிருந்தோர் அமைச்சர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Discussion about this post