ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் மோகனுக்கு ஆதரவாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பிரசாரம் செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணியில் அமைச்சர் காமராஜ் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அதிமுக நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேட்பாளர் மோகன் 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் எனவும், விரைவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி அனைத்து வீடுகளுக்கு சென்றடையும் என்றும் கூறினார்.
Discussion about this post