கர்நாடக அணைகளில் காவிரியில் 2 லட்சம் கன அடி அளவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பதால், காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூரில் இருந்து 1 லட்சத்து 90 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், காவிரி வெள்ளப் பெருக்கு, பல மாவட்டங்களில் நீடிக்கும் கனமழை குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிவாரண பணிகளை முடுக்கி விடுவது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
Discussion about this post