தற்காப்புக் கலைகளில் அடுத்தடுத்து பதக்கம் வென்று வரும் காரைக்கால் இரட்டையர்கள் தற்காப்பு கலைஞர்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
இந்தியாவில் முதல்முறையாக 7 வயதில் கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்ற இரட்டையர்கள் என்ற சாதனையைச் செய்த காரைக்காலைச் சேர்ந்த ஸ்ரீவிசாகன் மற்றும் ஸ்ரீஹரிணி. கராத்தே மட்டும் அல்லாமல் பாக்சிங், ஜூடோ, கும்பு, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளில் சிறந்து விளங்குகின்றனர்.
இவர்கள் கடந்த மாதம் கேரளாவில் நடைப்பெற்ற தென் இந்திய பாக்சிங் போட்டியில் ஜீனியர் பெண்கள் பிரிவில் தங்கம் பதக்கமும், ஜீனியர் ஆண்கள் பிரிவில் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளனர். மேலும் இவர்களின் கனவு கராத்தே போட்டியில் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்று தருவதே என்று கூறுகின்றனர். தற்போது சிறு வயதில் இவர்களுடைய செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
Discussion about this post