அமெரிக்காவில் இறக்குமதியாகும் சீன பொருட்களுக்கு 25 சதவீதம் வரை வரியை அதிகரித்து டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள முடிவால், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக போர் தீவிரமடைந்து உள்ளது.
சீனாவின் வர்த்தக நடைமுறைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், இதற்கு பதிலடியாக அந்த நாட்டு பொருட்கள் மீது அதிக அளவிலான வரி விதித்து வருகிறார். இதற்கு சீனாவும் பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரியை அதிகரித்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகப்போர் நடந்து வருகிறது.
இந்த வர்த்தக மோதலை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றன. இதில் அதிக முன்னேற்றம் ஏற்படாத நிலையில் சீன பொருட்களுக்கு 10 முதல் 25 சதவீதம் வரை வரி அதிகரித்து இருப்பதாகவும், இந்த நடைமுறை உடனடியாக அமலில் வருவதாகவும் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சீனா, பதிலடி கொடுக்கும் வகையில், பதில் நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக அறிவித்து உள்ளது. இதனால் இரு நாடுகள் இடையேயான வர்த்தகப்போர் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Discussion about this post