நாட்டு சர்க்கரை, அச்சு வெல்லம் உள்ளிட்ட இயற்கை தயாரிப்பு பொருட்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதால் அதன் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
பொள்ளாச்சி அருகே மூட்டம்பாளையத்தில் நாட்டு சர்க்கரை தயாரிப்பது பிரதான தொழிலாக உள்ளது. நாட்டு சர்க்கரை தயாரிப்பதற்கான கரும்பை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கர்நாடகாவின் மைசூரிலிருந்தும் உற்பத்தியாளர்கள் கொள்முதல் செய்கின்றனர். கரும்பை கொண்டு நாட்டு சர்க்கரை, அச்சு வெல்லம், மிட்டாய் போன்ற மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. நாளொன்றுக்கு 5 டன் வரை உற்பத்தி செய்யப்படும் நாட்டு சர்க்கரை கிலோ 65 ரூபாய் வரை விற்பனையாகிறது. பொதுமக்களும் அதிகளவு நாட்டு சர்க்கரை பயன்படுத்த தொடங்கியுள்ளதால், நாட்டுச் சர்க்கரை தேவை அதிகரித்துள்ளது. இதனால் நல்ல லாபம் கிடைப்பதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Discussion about this post