சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் காலமானார். அவருக்கு வயது 74.
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தில் 1944ஆம் ஆண்டு தோப்பில் முகமது மீரான் பிறந்தார். இலக்கிய உலகில் தனக்கென தனி வாசகர்களை கவர்ந்த மீரான், தென் தமிழகத்தில் வாழ்வியலை புனையக்கூடியத்தில் வல்லவர் என பெயர் பெற்றவர். தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நாவல்களை எழுதி உள்ளார்.
ஒரு கடலோர கிராமத்தின் கதை, துறைமுகம், கூனன் தோப்பு, அஞ்சுவண்ணன் தெரு, குடியேற்றம் ஆகிய நாவல்களையும், அன்புக்கு முதுமை இல்லை, தங்கரசு, அனந்த சயனம் காலனி, ஒரு குட்டித் தீவின் வரைபடம், தோப்பில் முகமது மீரான் கதைகள், ஒரு மாமரமும், கொஞ்சம் பறவைகளும் ஆகிய சிறுகதை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.
1997ம் ஆண்டு தோப்பில் முகமது மீரானின் சாய்வு நாற்காலி என்ற நாவல் சாகித்ய அகாடமி விருது பெற்றது.
வயது மூப்பு காரணமாக உடலமின்றி இருந்த அவர், இன்று காலமானார். நெல்லை வீரபாகுநகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை நெல்லை பேட்டையில் உள்ள பள்ளிவாசலில் தோப்பில் முகமது மீரானின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post