அரியலூரில் மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்கப்படுத்தும் விதமாக தங்கும் இடம், சத்தான உணவு வழங்கி உற்சாகப்படுத்தும் தமிழக அரசிற்கு மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். அரியலூரில் மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம் நடந்து வருகிறது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பயிற்சி பெற்று வருகின்றனர்.
தடகளம், கூடைப்பந்து, ஹாக்கி, கால்பந்து, உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பயிற்றுநர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி வழங்கப்பட்டு வரும் நிலையில், பயிற்சி பெறுபவர்களுக்கு இலவச தங்குமிடம் மற்றும் சத்தான உணவு வகைகள் அரசின் செலவிலேயே வழங்கப்பட்டு வருகின்றது. இது குறித்து கருத்து தெரிவித்த மாணவர்கள், தங்கும் இடத்துடன் சத்தான உணவு வழங்கி உற்சாகப்படுத்தும் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்தனர்.
Discussion about this post