ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கேவிகே சாமி நகர், காமராஜ்நகர், பாரதிநகர், குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில், தற்போது முதலமைச்சர் பழனிசாமி சிறப்பான ஆட்சி நடத்தி வருவதாக குறிப்பிட்டார். திமுக தலைவர் ஸ்டாலினை மக்கள் ஒருபோதும் முதல்வராக ஏற்க மாட்டார்கள் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
Discussion about this post