திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் நம்பிக்கை தெரிவித்தார். அதிமுக வேட்பாளர் முனியாண்டிக்கு ஆதரவாக வருவாக அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, ராஜம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், முனியாண்டி மட்டுமே திருப்பரங்குன்றத்தை சார்ந்தவர் என்றும் அவரால் மட்டுமே தொகுதி மக்களின் தேவை அறிந்து செயலாற்ற முடியும் என்று குறிப்பிட்டார்.
47 வருடங்களாக அதிமுகவின் கோட்டையாக இருக்கும் திருப்பரங்குன்றத்தில் முனியாண்டி 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கேட்டுக் கொண்டார்.
Discussion about this post