ஈரோட்டில் குழந்தை விற்பனை செய்த புரோக்கர்கள் குழந்தையை திரும்ப பெற்றுகொண்டு பணத்தை தராமல் இருந்த வழக்கு மேச்சேரி காவல் நிலையத்திற்கு மாற்றப்படவுள்ளது. மதுரையை சேர்ந்த தியாகராஜன் – மகேஸ்வரி தம்பதியினர் குழந்தை இல்லாததால், உறவினர் சுந்தர் என்பவர் மூலம் குழந்தையை தத்தெடுக்க முயற்சித்துள்ளனர். இதில் உறவினர் சுந்தர் என்பவர் புரோக்கர்களிடம் அழைத்து சென்றுள்ளார். அப்போது ரேவதி, கணேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய புரோக்கர்கள் மூன்று பேரும், தம்பதியினரை மேச்சேரிக்கு அழைத்து சென்று மேட்டூரை சேர்ந்த பெண்ணிடம் இருந்து 4.50 லட்சம் ரூபாய்க்கு பெண் குழந்தை ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், 6 மாதங்கள் கழித்து புரோக்கர்கள் குழந்தையை திரும்ப பெற்று கொண்டு வாங்கிய பணத்தை திரும்பதராததால் தம்பதியினர் ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவம் நடந்த பகுதி மேச்சேரி எல்லைக்குள் வருவதால் இந்த புகாரை மேச்சேரிக்கு அனுப்பி வைக்க இருப்பதாக காவல் ஆய்வாளர் முருகையன் தெரிவித்தார்.
Discussion about this post