அரவக்குறிச்சி சட்டமன்ற அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் வாக்கு சேகரித்த போது, அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அரவக்குறிச்சி சட்டமன்ற அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன், கா.பரமத்தி ஊராட்சிக்கு உட்பட்ட, ராஜபுரம், சாலைப்புதூர், வெங்கடாபுரம், அண்ணாநகர், நல்லிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, செல்லும் இடமெல்லாம், அவருக்கு, பெண்கள் ஆரத்தி எடுத்தும், பூக்களைத் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக வணிகவரித் துறை அமைச்சர் கே. வீரமணி, கழக செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி உள்ளிட்ட அதிமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பிரச்சாரத்தின் போது உடனிருந்தனர்.
Discussion about this post