கோடையில் உறவினர்கள் இல்லங்களுக்குச் செல்லும்போது புத்தகங்களையும், பழங்களையும் பரிசளிப்போம். இது மாம்பழ சீசன். மாம்பழங்கள் குறித்த செய்தித் தொகுப்பைக் காணலாம்.
கோடை காலம் என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது மாம்பழம்தான். கீத்தாக வெட்டப்பட்டும், முழுதாகவும் விற்கப்படும் மாம்பழங்களையும், மாங்காய்களையும் சப்புக்கொட்டி உண்ணாதவர் எவருமில்லை எனலாம். குறிப்பாக, அல்போன்சா, மல்கோவா, பங்கனபள்ளி, ருமானி, செந்தூரம், பெங்களூரு மற்றும் நாட்டு மாம்பழ ரகங்களை மக்கள் விரும்பி உண்கின்றனர். ஆனால், இந்த ஆண்டு, மழை குறைந்துள்ளதால், மே மாதம் தொடங்கியும் மாம்பழ வரத்து பாதியாக குறைந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மாம்பழங்களின் வரத்து குறைவால், விலை அதிகமாகியிருக்கிறது. இதனிடையே அதை சரிசெய்யும்வகையில், முக்கனியில் அடுத்த இடத்தை வகிக்கும் பலாப்பழங்களின் வரத்து அதிகரித்திருப்பதால், விற்பனையும் சூடுபிடித்திருக்கிறது.
இயற்கையாக ஒவ்வொரு காலகட்டங்களிலும் விளையும் பழங்களை, நாம் உணவாக எடுத்துக்கொள்ளும்போது, நோய்கள் ஏற்படாத வண்ணம், உடலின் சமநிலை சீராக இருக்கும். எனவே, சீசனுக்கு ஏற்ப கிடைக்கும் பழங்கள் சற்று விலை உயர்ந்திருந்தாலும், தவிர்க்காமல் உண்டு, ஆரோக்கியம் காப்போம்..
Discussion about this post