மதுராந்தகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தில் பல பகுதிகளிலும் கடும் வெப்பம் வாட்டி வந்த நிலையில், கத்திரி வெயிலின் வெப்ப சலனம் காரணமாக, ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக கனமழை பெய்தது.
அங்குள்ள கருங்குழி, மொரப்பாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Discussion about this post