ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறுவார் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் வரும் 19 ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மோகனை ஆதரித்து முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் பிரசாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில், மாப்பிள்ளையூரணி பகுதியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அங்கிருந்த பெண்கள் அமைச்சருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அனைத்து திட்டங்களும் இந்த பகுதியில் சென்றடைந்துள்ளதாகவும், இதனால் வேட்பாளர் மோகன் 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் எனவும் தெரிவித்தார்.
Discussion about this post