திருச்செந்தூர் வட்டாரத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளின் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு 30 வாகனங்கள் தகுதி இழப்பு செய்யப்பட்டன.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் ஆண்டுதோறும் பள்ளி வாகனங்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்குகின்றனர். திருச்செந்தூர் வட்டார போக்குவரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. முதலுதவி பெட்டியில் உள்ள காலாவதியான மருந்துகள் மற்றும் அவசர கால தீயணைப்பு கருவிகளை இயக்க தெரியாத ஓட்டுநர்களை கண்ட கோட்டாட்சியர் தனப்ரியா மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து ஓட்டுனர்களுக்கு அதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.31ம் தேதிக்குள் அனைத்து வாகனங்களும் உரிய முறையில் ஆய்வு செய்யப்பட்டு இயக்குவதற்கு அனுமதி அளிக்கப்படும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Discussion about this post