நாமக்கல் பச்சிளம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரின் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல்லில் குழந்தைகளை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்றதாக ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், இடைத்தரகர்கள் பர்வீன், அருள்சாமி, ஹசீனா உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டுள்ள அமுதா, ரவிச்சந்திரன், பர்வீன் ஹசீனா, நிஷா, லீலா ஆகியோர் நாமக்கல் நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி இளவழகன், 5 பேரின் ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
முன்னதாக அமுதா, முருகேசன், இடைத்தரகர் அருள்சாமி ஆகிய மூன்று பேரையும் 7 நாட்கள் சிபிசிஐடி போலீசார் வசம் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் கொல்லிமலையில் பிறந்த அனைத்து குழந்தைகளின் விவரங்களும் சரிபார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post