அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து சேலம் அதிமுக நிர்வாகி மேற்கொண்ட நூதன பிரசாரம் வாக்காளர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது.
தமிழகத்தில் வரும் 19ம் தேதி 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுகவினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காசிபாளையத்தில் அதிமுகவினர் நூதன தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதிமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ் குடுகுடுப்பைக்காரன் போல வேடமணிந்து வீடு வீடாகச் சென்று செந்தில்நாதனை ஆதரித்து வாக்கு சேகரித்தார். தமிழக அரசின் சிறப்பு திட்டங்களை எடுத்துக்கூறி அவர் பிரசாரம் மேற்கொண்டார்.
Discussion about this post