குமாரபாளையத்தில் 75% கூலி உயர்வு கோரி விசைத்தறி தொழிலாளர்கள் 6-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தைக்கு வர வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்குகின்றன. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2015 ஆம் ஆண்டு போடப்பட்ட கூலி உயர்வு ஒப்பந்தப்படி இதுவரை கூலி உயர்வு வழங்காததை கண்டித்தும் 75% கூலி உயர்வு வழங்க வலியுறுத்தியும் 6-வது நாளாக தொடர்ந்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே தொழிலாளர் நல இணை ஆணையர் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்காக அழைத்த போதிலும் விசைத்தறி உரிமையாளர்கள் ஜவுளி உற்பத்தியாளர்களை மறுப்பதாக கூறப்படுகிறது. இதனை கண்டிக்கும் வகையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
Discussion about this post