நீதிமன்றங்களின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் பேசிய சி.ஆர் சரஸ்வதி மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அதிமுக வழக்கறிஞர் பிரிவு அனுமதி கோரியுள்ளது. தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்று பேசிய சி.ஆர் சரஸ்வதி, 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் காலதாமதமாக தீர்ப்பு வழங்கியதாக கூறி உயர்நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் தட்சிணாமூர்த்தி, அரசு தலைமை வழக்கறிஞரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அதில், நீதிமன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ச்சியாக பேசிவரும் சி.ஆர். சரஸ்வதி மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Discussion about this post