இந்துக்களை வன்முறையுடன் இணைத்து பேசியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரசாரத்தில் பேசிய மோடி இந்துக்கள் வன்முறையில் ஈடுபட மாட்டர்கள் என கூறினார். அவரது பேச்சிற்கு பதிலளித்த சீத்தாராம் யெச்சூரி இந்து புராணங்களான ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றில் வன்முறை சம்பவங்கள் நிறைந்துள்ளதாகவும், இந்துக்கள் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள் என்ற கூற்று தவறானது எனவும் பேசி இருந்தார். இதையடுத்து இந்துக்களின் மனம் புண்படும் வகையில் பேசியதாகவும், இந்து மதத்தின் புகழை அவர் கெடுக்க விரும்புவதாகவும், யோகா குரு ராம்தேவ் ஹரித்துவார் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, சீதாராம் யெச்சூரி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கியுள்ளனர்.
Discussion about this post