ஐபிஎல் இன் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற 54வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் ஹைதராபாத் அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக ரித்திமன் சாகாவும், மார்டின் கப்டில்லும் களமிறங்கினர். 46 ரன்களை குவித்திருந்த நிலையில், ரித்திமன் சாகா 20 ரன்களை அடித்து சைனி பந்து வீச்சில் யாதவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் வந்த பாண்டேவும் 9 ரன்னில் வெளியேற அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களிலேயே வெளியேறினர். கேப்டன் வில்லியம்சன் பொறுமையாக நிலைத்து நின்று அரை சதமடித்து கடைசி வரை அவுட்டாகாமல் 70 ரன்களை எடுத்தார். அதிகபட்சமாக விஜய்சங்கர் 27 ரன்களும், கப்டில் 30 ரன்களும் எடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது.
Discussion about this post