கத்திரி வெயில் பிறந்துவிட்டது. அதன் பாதிப்பில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள மக்கள் செய்ய வேண்டியது என்ன? – பார்ப்போம்…
நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான நேரத்தில் வெயில் உச்சத்தில் இருக்கும், அப்போது வெளியே செல்வதைத் தவிர்க்கவும்.
தேவையானபோதெல்லாம் தண்ணீர் பருகிக் கொண்டே இருக்க வேண்டும். பயணம் செய்பவர்கள் தண்ணீரைக் கட்டாயம் எடுத்துச் செல்லவும்.
மது, டீ, காபி, கார்போ ஹைட்ரேட் பானங்கள் ஆகியவை நீர்ச்சத்தைக் குறைக்கும், எனவே அவற்றை அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
எலுமிச்சை சாறு, நீர் மோர், லெஸ்ஸி, இளநீர், நீராகாரம் ஆகியவை நீர்ச்சத்தை மேம்படுத்தும். இவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்ளவும்.
பழைய உணவுகள், புரதம் அதிகம் உள்ள உணவுகள் ஆகியவற்றால் உடல்நலம் பாதிக்கப்படும், இவற்றைத் தவிர்க்கவும்.
வெயிலில் கடும் வேலைகளை மேற்கொள்ள வேண்டாம். வேலை செய்ய நேர்ந்தால் தொப்பி, ஈரத் துணி ஆகியவற்றைப் பயன்படுத்தவும்.
நிறுத்திய வாகனங்களில் குழந்தைகள், வயதானவர்கள், செல்லப் பிராணிகளை விட்டுச் செல்லக் கூடாது.
எடை குறைவான, இறுக்கம் இல்லாத கதர் அல்லது பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.
காலணிகள், குடை, குளிர் கண்ணாடி ஆகிவற்றைப் பயன்படுத்தினால் வெயிலின் பாதிப்பைக் குறைக்கலாம்.
வெயிலால் தலை சுற்றல், மயக்கம் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
Discussion about this post