வேலூர் அருகே உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மையத்திற்கு செல்ல சீரான சாலை அமைத்து தரக்கோரி அதிகாரிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் அமைந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மையம், அரக்கோணத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. பேரிடர் காலங்களில் பணியாற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. பேரிடர் காலங்களில் மீட்பு பணிக்காக கனரக வாகனங்களை கொண்டு செல்ல வேண்டிய நிலையில், சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதால், தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே இந்த சாலையை சீரமைத்து தர கோரி அதிகாரிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
Discussion about this post