லாட்டரி அதிபர் மார்டினின் காசாளர் பழனி மேட்டுப்பாளையம் அருகேயுள்ள குட்டையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளியங்காடு என்னும் பகுதியில் உள்ள குட்டையில் ஒரு ஆண் பிணம் மிதப்பதாக காரமடை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் நீரில் மிதந்து கொண்டிருந்த உடலை மீட்டனர். பின்னர் நடைபெற்ற விசாரணையில் இறந்தவரின் பெயர் பழனிசாமி என்பதும், பிரபல லாட்டரி வியாபாரி மார்டினுக்கு சொந்தமான ஒரு நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து இவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அண்மையில் நாடு முழுவதும் மார்டினுக்கு சொந்தமான பல்வேறு அலுவலகங்களில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்றது. இதுகுறித்த விசாரணைக்காக பழனிசாமியை வருமான வரித்துறையினர் அழைத்து சென்றதாகவும், விசாரணைக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வருமான வரித்துறையின் அடுத்தகட்ட விசாரணைக்கு பயந்து பழனிசாமி தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
Discussion about this post