சமூக வலைத்தளமான டிவிட்டரில் இன்றைய தினத்தில் “தமிழரின் வேலை தமிழருக்கே” என்ற ஹேஸ்டேக் மிக வேகமாக ட்ரெண்ட் ஆகி வருகிறது.
சமீபகாலமாக மத்திய அரசின் துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், தமிழர்களுக்கு அந்த வேலை வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்நிலையில் அண்மையில் ரயில்வே துறையின் பழகுநர் பணியிடங்களுக்கு நேர்காணல் நடைபெற்றதாகவும், 7000 பேருக்கு நடைபெற்ற அந்த நேர்காணலில் 400 பேர் மட்டுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், மற்றவர்கள் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து இன்று பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற உள்ளது. இதன் எதிரொலியாக டிவிட்டரில் #தமிழகவேலைதமிழருக்கே என்ற ஹேஸ்டேக்கும், #TamilnaduJobsForTamils என்ற ஹேஸ்டேக்கும் செம ட்ரெண்டாகி வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
Discussion about this post