குறுகலான இடத்தில் இருக்கும் சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையத்தை இடவசதியுடன் கூடிய இடத்திற்கு மாற்ற அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் 1984 ஆம் ஆண்டு தீயணைப்பு நிலையம் கொண்டு வரப்பட்டது. இந்த தீயணைப்பு நிலையத்தால் சேத்தியாத்தோப்பு பகுதியை சுற்றியுள்ள முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் தீ விபத்து மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தீயணைப்பு நிலையம் சந்தைதோப்பு செல்லும் மிகவும் குறுகலான பாதையில் அமைந்துள்ளதால் அவசர நேரத்தில் விரைவாக செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, தீயணைப்பு நிலையத்தை இடவசதியுடன் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Discussion about this post